Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… பேசுவதில் நிதானம் தேவை.. சாதனை படைப்பீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மாறுபட்ட நிகழ்வு குறித்து எண்ணம் கொஞ்சம் ஏற்படலாம். பேசுவதில் நிதானத்தை பின்பற்றவேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலவிய பணியை முடிப்பது நல்லது . செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். இன்று உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதம் நிலையில் ஏற்பட்டாலும், விரும்பிய பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இன்று சாதனை படைக்கக் கூடிய நாளாகவே இருக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் ஓங்கி நிற்கும். சமூக ஈடுபாடு அதிகரிக்கும். பொதுநலன் கருதி இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கக்கூடும். இன்று எந்த ஒரு முயற்சியும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |