கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அறிவுபூர்வமாக செயல்பட்டு வெற்றி காணும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் பணவரவும் நன்மையை கொடுக்கும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்கக் கூடும். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள் செலவுகள் கூடும் வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும் பேசும்பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் அவசரப்படாமல் புத்திக்கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்ப்புகள், செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
வாடிக்கையாளர்களிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள், அதுபோலவே இன்று காதலர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும். கூடுமானவரை பேசும் போது நிதானத்தை கடைபிடித்தாலே போதுமானதாகவே இருக்கும். மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே மனதை அமைதியாக வைத்துக் கொண்டாலே தேர்வில் நீங்கள் எளிதாக வெற்றி பெற முடியும். இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு .
உங்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை காரசாரமான உணவுகளை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டு தூங்கச் சென்றால் நீங்கள் படித்த பாடங்கள் உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடிய சூழல் எளிதாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று உருவ வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்