Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…மங்கல ஓசை மனையில் கேட்க்கும்.. பாக்கிகள் வசூலாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாளாகவே இருக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும், மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும், இன்று காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் இருக்கும், பணவரவு சிறப்பாக இருக்கும், உங்களுடைய அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவரின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இருங்கள்.

யாரைப் பற்றியும் நீங்கள் புறம் பேச வேண்டாம். அது மட்டுமில்லாமல் மாணவச் செல்வங்களுக்கு கையில் சிறு தடைகள் இருக்கும். கடினமாக உழைத்து தன் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தயவுசெய்து இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் கல்வியில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. மனதை நீங்கள் தயவுசெய்து அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் அமைதியாக இருந்தாலே வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |