Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… மனம் புத்துணர்வு அடையும்..பேச்சில் இனிமை பிறக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனம் செயலில் புத்துணர்வு ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று பேச்சில் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாகவே முடியும். வெளிநாட்டு தொடர்பு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் இன்று வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களை பற்றி பேச்சுவார்த்தை நடக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவதற்கு உங்களது கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். அதேபோல சமூக அக்கறையுடன் நீ இன்று நீங்கள் செயல்படுவீர்கள்.

காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகவே இருக்கும். காதலில் வெற்றி ஏற்படும். திருமண முயற்சி இன்று முன்னேற்றம் கூடும். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  இள மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே இந்த வருடம் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |