கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தயவுசெய்து சக மனிதர்களை நீங்கள் பகைத்துக் கொள்ளாமல் இருங்கள். அவரிடம் கொஞ்சம் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து சேரும். அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். தூரதேசத்திலிருந்து உங்களுக்கு சில நல்ல தகவல்கள் வந்துசேரும். அதனால் மனம் உற்சாகமடையும். மற்றவர்களிடம் கொஞ்சம் வளைந்து கொடுத்து வேலைகளை செய்து கொள்ளுங்கள்.
ரொம்ப சிறப்பாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. அப்பொழுதுதான் காரியங்கள் எளிதாக நடந்து முடியும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களில் மேற்கொள்ள வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் எப்பொழுதுமே கும்ப ராசிக்காரர்கள் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். நிதி மேலாண்மையில் ரொம்ப கவனம் இருக்கட்டும். பெரியோரின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இன்று எதைச் செய்வதாக இருந்தாலும் பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப நல்லது. புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். யாரிடமும் பணம் கடன் மட்டும் இன்று வாங்க வேண்டாம். திருமணப் பேச்சுவார்த்தை ஏதேனும் நடத்தினால் இன்று ரொம்ப சிறப்பாகவே இருக்கும். காதலர்களுக்கு இன்று மனம் மகிழ்ந்து கொள்ளும் நாளாகவே இருக்கும். பொருளாதார விருத்தியும் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்