Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்… உன்னத நிலையை அடைவீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவு கொஞ்சம் ஏற்படும். செலவை குறைக்க தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரிடும். இன்று  வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க கூடிய யோகம் இருந்தாலும் வாங்கும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை இன்று அடையக்கூடும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கொஞ்சம் இருக்கும்..

மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவிகளும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும், கவலைவேண்டாம்.  மனக்குழப்பம் மட்டும் தேவையில்லாமல் அடையாதீர்கள். கூடுமானவரை மனதை அமைதியாக வைத்துக்கொள்ள இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அன்பு நண்பர்களே வைரஸ் தொற்றின் காரணமாக மற்றொரு நபரிடமிருந்து 2 மீட்டர் அளவில் நாம் நம்மை தனிமை படுத்தி கொள்வது ரொம்ப நல்லது.

ஓரிரு தினங்களில் முழுமையாக இந்த நோய்த்தொற்றை நாம் அகற்றிவிடலாம். அதற்கு பொதுமக்களாகிய நாம் தான் கொஞ்சம் கடுமையாக போராட வேண்டியிருக்கும். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டியிருக்கும். தயவு செய்து கவனமாக இதனை மேற்கொள்ளுங்கள். சரி இன்று காலை எழுந்ததும் சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. காரியங்கள் அனைத்துமே சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |