கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத அளவில் பணவரவு உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலமான செய்திகள் வந்துசேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் இன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உருவாகும். அதில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் இருக்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களை மதிப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூடிய சூழலும்இன்று இருக்கும். தேர்வு எழுதுபவர்கள் உங்களுடைய மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு இரண்டு நிமிடம் தியானத்தை மேற்கொள்ளுங்கள். தேர்வு முடியும் வரை உணவு கட்டுபாட்டில் கொஞ்சம் கவனமாக இருங்கள். காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள், படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்