கும்பம் ராசி அன்பர்களே..! சிலரது தேவையற்ற விமர்சனம் மனவருத்தத்தை உங்களுக்கு கொடுக்கும். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது தான் ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற கூடுதல் மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறையும் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாகவே எதையும் எடுத்துச் சொல்வது ரொம்ப நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும்.
இன்று முடிந்தால் ஆன்மிக எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துங்கள். உங்களுடைய சிந்தனை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். மனமும் அமைதியாகவே இருக்கும். முடிந்தால் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது கூட ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள், மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்