கும்பம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வரும் நாளாகவே இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து இணையலாம். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆதாயம் உண்டாகும். இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி பெறுவீர்கள்.
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். பெண்களுக்கு சாதுரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும் பயணங்கள் ஓரளவு புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும், தேர்வில் நல்ல மதிப்பெண்களை நல்ல தேர்ச்சியும் பெறமுடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும். நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்