கும்பம் ராசி அன்பர்களே.! வாக்குறுதிகளை நிறைவேற்றி பணிபுரிவீர்கள்.
இன்று செயலில் வசீகரத் தன்மை கூடும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வசீகரமான தோற்றம் உருவாகும். காரியங்களில் வெற்றி இருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களை கையாளும் போது கவனம் வேண்டும். தீய ஆயுதங்களை கையாளும் போது கவனம் வேண்டும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். உறவுகளிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். தேவை இல்லாத வார்த்தைகளை பேசி முன் கோபத்தை வரவழைத்து கொண்டுள்ள வேண்டாம்.
காசு பணம் கையில் வருவதில் காலதாமதம் ஏற்படும். கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல் சில நேரத்தில் வருத்தத்தை ஏற்படுத்தும். நம்மளை புரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். காதலில் நிலைபாடுகள் நிலைபாடுகளை புரிந்துகொண்டு சரியான முறையில் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். ஆனால் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்