கோவிலின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி அணிருந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் ராமசாமி என்ற முதியவர் தனது மனைவி ராமாயி என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமாயி மற்றும் ராமசாமி உடனடியாக பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.