நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் கமிட்டி குழு சார்பில் முன்மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகார மண்டபம் ஆகியவை கட்டப்பட்டது. இந்த கோவிலின் புதிய மண்டபங்களை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் மூலவர் மற்றும் உற்சவருமான சுடலைமாடனுக்கு நறுமண பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் சிறப்பு அலங்காரங்களும் செய்துள்ளார்கள். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.