கும்ப ராசி அன்பர்கள்…!! உங்களுடைய இனிய அணுகுமுறையால் அனைவரையும் கவர்வீர்கள். பலன்களும் உங்களைத் தேடிவரும். சொந்தங்கள் விரும்பி வந்து உறவை நாடுவார்கள். தொழில் வளரும், பணம் வசூலாகும். அனைத்திலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அவர்களைப் பற்றி குறை கூறவேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். அது குறித்த கவலை தேவையில்லை சரியான நேரத்தில் கிடைக்கப் பெறும்.
தேவையில்லாத மனக் குழப்பங்கள் இருக்கும் கவனமாக வேலையை செய்ய வேண்டும். சமையலறையில் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அது போலவே இன்று மற்றவர்கள் பிரச்சினையில் தயவுசெய்து தலையிட வேண்டாம். காதலர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. ஆனால் எப்போதும் போல் தேவையில்லாமல் பேசி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்