Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசி… பேசும் பொழுது நிதானமாக பேசவேண்டும்…பிடிக்காத உறவுகளை சந்திக்க நேரிடும்…

கும்ப ராசி அன்பர்களே… இன்று பொருள் இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.உணர்வு பயம் அதிகரிக்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது.பிடிக்காத உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி இல்லாமல் போகும்.இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் தயவுசெய்து ஈடுபடுங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.

உடல் நலமும் மன பலமும் மகிழ்ச்சியாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக்கொண்டு காரியத்தை செய்வது ரொம்ப சிறப்பாக இருக்கும். உங்களுடைய பேச்சை மற்றவர்கள் கேட்கக்கூடிய அளவில் இருக்கமாட்டார்கள் அவர்களிடம் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதேபோல யாரிடமும் நீங்கள் பேசும் பொழுது நிதானமாக பேசவேண்டும்.

வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் பிரச்சனைகள் இல்லை பெரிய அளவில் ஏதும் செல்லாது. முக்கியமான பணிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவரிடம் கலந்து உரையாடி பின்னர் முடிவுகளை எடுப்பது ரொம்ப சிறப்பு. காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு சிவபெருமான் வழிபாட்டையும் இல்லத்தில் செய்யுங்கள் உங்களுக்கு அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் பச்சை நிறம்

 

 

Categories

Tech |