Categories
தேசிய செய்திகள்

குரங்கம்மை தடுப்பூசி…. சீரம் CEO சொன்ன முக்கிய தகவல்….!!!

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வைரஸ் போல் இல்லாமல் இந்த குரங்கு வைரஸ் பாதிப்பு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அரசு மிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை, சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சருடனான சந்திப்பை எப்போதும் போல் இருந்தது. குரங்கு அம்மை தடுப்பூசி மற்றும் அதன் தேவை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே கொரோனா தடுப்பூசியை போல குரங்கு அம்மைக்கு தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |