Categories
உலக செய்திகள்

“குரங்கம்மை நோய் தொற்று” அதிகரிக்கும் பாதிப்பு…. 524க்கு உயர்ந்த எண்ணிக்கை….!!

இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது. 

ஆப்பிரிக்கா நாட்டில் காணப்படும் குரங்கம்மை நோய் தொற்று தற்போது  பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நோய் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கம்மை நோயினால்  பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்  500க்கும் மேற்பட்டவர்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இங்கு குரங்கம்மை நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது அவ்வகையில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 524 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |