Categories
Uncategorized உலக செய்திகள்

குரங்கம்மை நோய் தொற்று…. இப்படிதான் பரவியதா….? வெளியான தகவலால் பரபரப்பு….!!

குரங்கம்மை நோய்த்தொற்று வன பகுதியில் இருக்கும் இறந்த குரங்கு, வவ்வால், எலிகளை எடுத்து வந்து மக்கள் உணவாக சாப்பிட்டதில்  பரவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா  நாடுகளில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகின்றது. இந்த நோய் தொற்றின் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கம்மை நோய் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி நைஜீரியாவில் குரங்கம்மை நோய்த் தொற்றினால் நடப்பாண்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காங்கோவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவின் தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ கூறியதாவது, “நாட்டில் 465 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோவின் நிலை மோசமடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காங்கோவில்  வசிப்போர் வன பகுதிக்கு சென்று இறந்த குரங்கு, வவ்வால் மற்றும் எலிகளின் உடல்களை எடுத்து வந்து உணவாக சாப்பிட்டதில் குரங்கம்மை தொற்று பரவியுள்ளது. மேலும் அங்கு குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். இதேமாதிரி மற்றொரு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சந்தேகத்திற்குரிய வகையிலான 66 பேரில் 21 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியானது.

இந்நிலையில் அவர்களில்  ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். மேலும் 40 வயது கொண்ட அவருக்கு இணை நோய்களும் இருந்தன என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து குரங்கம்மை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனினும், 36 மாகாணங்களில் 22 மாகாணங்களில் மட்டும் 247 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று  உறுதி செய்யப்பட்டது.

Categories

Tech |