கேரளாவில் குரங்குகளை பிடிப்பதாக வாக்குறுதி தருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை யார் பிடிப்பதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளா வயநாடு கல்பேட்ட பகுதியில் பொது மக்கள் வெளியில் நடமாட அளவிற்கு குரங்குகள் பிரச்சனை செய்து வருகிறது. அதனால் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து அவர்களுக்கு மட்டுமே இடைத் தேர்தலில் ஓட்டளிக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.