Categories
பல்சுவை

குரங்குக்கு தாகம் தீர்க்கும் மாற்றுத்திறனாளி!…. இணையத்தை கலக்கும் வீடியோ…. பாராட்டும் நெட்டிசன்கள்….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது  @Gulzar_sahab என்ற டுவிட்டர் யூசர் நெகிழ்ச்சியான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தாகத்துடன் சுற்றித் திரியும் ஒரு குரங்குக்கு, மாற்றுத்திறனாளி தண்ணீர் கொடுத்து உதவுகிறார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். குரங்கு தண்ணீருக்குதான் அலைகிறது என்பதை உணர்ந்து, அதற்கு தாகம் தீர்த்த அந்த மாற்றுத்திறனாளிக்கு இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தாகத்தில் இருந்தபோது தண்ணி கொடுத்து உதவிய மாற்றுத்திறனாளிக்கு குரங்கு மைண்ட் வாய்ஸில் தேங்க்யூ சொன்ன வீடியோ இணையவாசிகளை நெகிழ வைத்திருக்கிறது.

Categories

Tech |