உலகில் சமீப காலமாக குரங்கு அம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதன்முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனைப் போலவே சமீபத்தில் பிரேசிலில் நோய் பயத்தால் மக்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அதனால் உடனடியாக குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. அதன்படி குரங்கு அம்மை என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயரை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.