இங்கிலாந்து நாட்டில் மேலும் 104 நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பானது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 470 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களில் 99 % பேர் ஆண்கள் எனவும் ஏராளமானவர்கள் லண்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உலகளவில் 28 நாடுகளில் 1,285 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக சென்ற வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது.
அந்த நாட்டை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலுள்ள 8 நாடுகளில் இதுவரையிலும் 1500க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி 72 பேர் குரங்கு அம்மை பாதிப்பால் இறந்துள்ளனர். இதற்கிடையில் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பரவக்கூடியதாகக் கருதப்படுகிறது.