Categories
மாநில செய்திகள்

குரங்கு அம்மை எதிரொலி: எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரம்…. அதிரடியில் இறங்கிய அரசு…..!!!!!

அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குரங்கம்மை  நோய் பரவாமல் தடுக்க தமிழக – கேரள எல்லையில் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய வழித்தடங்களில் வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக லோயர்கேம்பில் சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம் அமைத்து கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனையில் யாருக்காவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள  பரிந்துரைக்கப்படுகிறது.

Categories

Tech |