வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிதாக குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு தெரிய வந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் மக்கள் கூடுவது, திருவிழாக்கள், விருந்துகள் என ஐரோப்பிய நாடுகளில் நோயின் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று ஐநாவுக்கான ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் கூறுகிறார். இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்களிடம் காணப்படுகிறது.
அவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவிடும் என்றும் இந்த பாதிப்புகள் பெரிய அம்மை நோயாளிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளே ஆகும். இதுவரை 11 நாடுகளில் 80 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை விரைவு படுத்தும் போது இந்த பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். அதுமட்டுமில்லாமல் மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும். இந்த பாதிப்பு இரண்டு முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் டெல் அவிவ் நகரில் உள்ள இசிலோவ் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது அவர் நல்லமாக உள்ளார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்களது காய்ச்சல் மற்றும் தோலில் கடுமையான அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.