Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் எதிரொலி…. பிரபல நாட்டில் அவசர நிலை பிரகடனம்….!!!!!!!!!

குரங்குஅம்மை  நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதை  தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெடித்து கிளம்பிய  குரங்கு அம்மை கிருமி தற்போது வரை 78 நாடுகள் தீவிரமாக பரவி இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 4,600 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கலிபோர்னிய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு 800 பேர் குரங்கு அம்மை வைரசால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் மட்டும் 261 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் குரங்கு அம்மை தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியாக சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் மருத்துவ அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டு இருக்கிறது. கலிபோர்னியாவில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் போதுமான தடுப்பூசிகளை பிடன்  அரசு விநியோகிக்கவில்லை எனவும் சான் பிரான்சிஸ்கோ நிர்வாகம் குற்றம் சாட்டியிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் 70000 குரங்கு அம்மை  தடுப்பூசிகள் தேவைப்படுகின்ற நிலையில் பிடன் அரசு நிர்வாகம் 12000 தடுப்பூசிகளை  மட்டுமே விநியோகித்திருப்பதாக மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

Categories

Tech |