குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை என்ன?
# குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலாவதாக தனிமைபடுத்த வேண்டும்.
# சோப்பு மற்றும் தண்ணீர் (அல்லது) சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
# குரங்கு அம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துகொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணியவும்.
# சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்காக கிருமி நாசினியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக்கூடாதவை என்ன?
# குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை மற்றவர் பகிர்ந்து கொள்ளகூடாது.
# அதன்பின் குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்கவேண்டாம்.
# குரங்கு அம்மை அறிகுறி தெரிந்தால் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது.
# குரங்கு அம்மை நோய் பற்றிய தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.