Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் பாதிப்பு ….உலக சுகாதார நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மை என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்த நோய், இதுவரையில் 58 நாடுகளை தாக்கியுள்ளது எனவும், இதனால் உலகளவில், 3,417-க்கும் அதிகமானோர், குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து இந்த குரங்கு அம்மை நோய் தொற்று பரவலின் காரணமாக, உலக சுகாதார நிறுவனம், நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டமானது, குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் நோக்கில் நடைபெற்றது. மேலும் இதுகுறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, குரங்கு அம்மை நோய் பரவுவது என்பது அசாதாரணமானது என்றும், மேலும்  கவலைக்குரியது என்றும்  கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த தொற்று நோயானது, பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு குறிப்பிட்ட, ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது இதன் மூலம் தெளிவாக புரிகிறது. மேலும் சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயின் அறிகுறியாக, கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் வரலாற்று ரீதியாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்று பரவலின்  வேகம் விரிவடைகிறது. எனவே இதுவரையில் காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கும் கூட, இந்த நோய்  தொற்று பாதிப்பு  ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த நோய் தொற்று எலிகள், அணில்கள் மற்றும் வளர்ப்பு செல்லப்பிராணிகள் போன்ற  வனவிலங்குகளுக்கும்  பரவும் ஆபத்து உள்ளது எனவும் இதனால்  உலகம் முழுவதும் பரவும் எனவும் மேலும் மனித நோய்த்தொற்றின் தொடர்ச்சியான அபாயத்திற்கு, இந்த நோய்  வழிவகுக்கும். இவ்வாறு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Categories

Tech |