Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்பு…. உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும்…. சவுமிய சாமிநாதன் வேண்டுகோள்….!!!!!!!!

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குரங்கு அம்மை பரவல் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை  எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகின்றது. இது ஆர்த்தோ பாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரிய அம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோ பாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளை கொண்டுள்ளது.

மேலும் பெரியம்மை தடுப்பூசிகளை குரங்கு அம்மைக்கு எதிராக பாதுகாப்பு நல்கினாலும் கூட குரங்கு அம்மைக்கு என பிரத்தியேகமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. நம்மிடம் தற்போது இருக்கின்ற பெரிய அம்மை தடுப்பூசிகள் எல்லாம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகள் அவையும் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு பற்றி உலக நாடுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும். மேலும் மரபணு பகுப்பாய்வு தரவுகளை உலக நாடுகள் எங்களுக்கு அனுப்ப வேண்டும் குரங்கு அம்மை இன்னொரு பெருந்தொற்றாக உருவாகாமல் தடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |