Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்பு: ஸ்பெயினில் 2-வது நபர் இறப்பு…. வெளியான தகவல்….!!!!!

குரங்கம்மை பாதிப்புக்கு இதுவரையிலும் ஆப்பிரிக்காவுக்கு வெளியே எந்தவொரு நாட்டிலும் உயிர் பலி இல்லை என்ற நிலை இருந்து வந்த சூழ்நிலையில், இத்தொற்றுக்கு பிரேசில் 41 வயது ஆண் ஒருவர் பலியாகிஉள்ளார். இவர் தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர் என்று கூறப்படுகிறது. அதாவது கடும் நோய் எதிர்ப்பு பிரச்சினைகள் இவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் இத்தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். குரங்கம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருக்கிறது. இந்நிலையில் ஸ்பெயினில் குரங்கு அம்மை பாதிப்புக்கு 2-வது நபர் உயிரிழந்துள்ளார். இதை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

ஐரோப்பியாவிலும் இது 2வது உயிரிழப்பு ஆகும். இருப்பினும் உயிரிழந்தவர் பற்றிய அடையாளம் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையில் முதல் நபர் ஸ்பெயினின் கிழக்கே கம்யூனிடேட் வேலன்சியா பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பும் இருந்துள்ளது. அடுத்தடுத்து 2 தினங்களுக்குள் ஸ்பெயினில் குரங்கு அம்மை பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின்நாட்டில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட 4,298 பேரில் 64 பேர் பெண்கள். அவர்களில் 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 10 மாத குழந்தை மற்றும் 88 வயது முதியவர் என பல வயது தரப்பினருக்கும் இந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |