Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்பு: 1,076 ஆக அதிகரிப்பு…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!!

இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை இப்போது ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அந்த நாட்டில் கடந்த 26ஆம் தேதி வரையில் 1,076 பேருக்கு பாதிப்பு இருப்பது ஆய்வக பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலுள்ள 8 நாடுகளில் இதுவரையிலும் 1500க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு அதிகளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவகூடும் என்று கூறப்படுகிறது.

இதனுடைய அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்றவை காணப்படும். இது தவிர்த்து மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்லகூடும். இதன் பாதிப்பு 2 -4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 27 பேர் ஸ்காட்லாந்திலும், 5 பேர் வடக்கு அயர்லாந்திலும், 9 பேர் வேல்சிலும் மற்றும் 1,035 பேர் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் இருக்கின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு கழகத்தின் இயக்குனர் சோபியா மக்கி கூறியதாவது “வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலங்களில் அதிகளவில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்கும்படியும், இந்த பாதிப்பு பரவிவிடாமல் இருக்க விரைவாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |