சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் புற்று நோய்க்காக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் குரங்கமை பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இதனையடுத்து குரங்கு அம்மை 77 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.