Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை: 26 நாடுகளில் 643 பேருக்கு பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்…..!!!!

உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கையானது 643ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரையிலான நிலவரமாகும்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது “உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு அம்மை பரவி இருக்கிறது. இங்கிலாந்தில் 190 நபர்களும், ஸ்பெயினில் 142 பேரும், போர்ச்சுக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் அவர் கூறியதாவது “தற்போது உலகம் முழுதும் குரங்கு அம்மை பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும். வைரஸ் மரபணுவை ஆய்வு மேற்கொண்டு, வாய்ப்புள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதனை வரிசைப்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |