Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை: 55-க்கும் அதிகமான நாடுகளில் நுழைந்தது…. வெளியான தகவல்…..!!!!

தற்போது ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55க்கும் அதிகமான நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இந்த நோய் தற்போது நியூசிலாந்திலும் நுழைந்து இருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இத்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் குரங்குஅம்மை நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகிறது.

ஆகவே குரங்குஅம்மை பாதித்திருக்கும் நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையில் இந்நோய் பரவலை தடுக்க பெரிஅம்மை தடுப்பூசிகளை உபயோகிப்பது தொடர்பாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகமானது பரிசீலனை செய்து வருவதாக அங்கு இருந்து வரும் தகவல்களானது கூறுகிறது.

Categories

Tech |