தற்போது குரங்கு காய்ச்சலானது 24 நாடுகளில் பரவியுள்ளது. இந்நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனரான ஹன்ஸ் குளுஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “இந்த காய்ச்சல், கொரோனா தொற்று பரவிய அதேபாணியில் பரவவில்லை. ஆகவே கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என இன்னும் தெரியவில்லை.
ஆகையால் அது சந்தேகமாகவே இருக்கிறது. அதற்கு தொற்று பாதித்தவர்களை விரைவாக அடையாளம்கண்டு தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். இனிமேல் வரக்கூடிய மாதங்களில் பண்டிகைகள் வருவதால் இந்த காய்ச்சல் அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில் உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்க அதுஒரு வாய்ப்பாக அமையும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.