திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குரங்கு குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் அதன் உடலை வனப்பகுதியில் புதைத்தனர். வியாபாரிகள் குரங்கு குட்டியை காப்பாற்றும் என்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.