Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குருசுமலைக்கு சென்ற நபர்….. திடீரென ஏற்பட்ட விபரீதம்….. போலீஸ் விசாரணை….!!

திடீரென ஒருவர் மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புனித வெள்ளியை முன்னிட்டு குருசுமலை பகுதிக்கு சிலுவையை தரிசனம் செய்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் சிலுவையை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஜெயராஜன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஜெயராஜனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஜெயராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வெள்ளறடை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஜெயராஜனின் உடலை அவரது மனைவி மற்றும் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

Categories

Tech |