இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் 2017-ஆம் வருடம் வெளியாகிய “8 தோட்டாக்கள்” படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இதையடுத்து இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வா நடிப்பில் அண்மையில் வெளியாகிய “குருதி ஆட்டம்” படத்தை இயக்கினார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்து இருந்தார். பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ஸ்ரீ கணேஷ், நடிகை சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகை சுகாசினி சஞ்சீவ் நாடக கலைஞர், மாடல், நடிகை என பண்முகத்தன்மை கொண்டவர் ஆவார். அத்துடன் சுகாசினி சஞ்சீவ் விஜய் சேதுபதியின் “சீதக்காதி”, உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.