குருமலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊசூரை அடுத்திருக்கும் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலை கிராமத்தில் நேற்று திடீரென மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். மலை கிராமத்தில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த பின் தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, துணை சுகாதார நிலையம் அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
இதையடுத்து குருமலை கிராமத்தில் இருந்து வெள்ளைக்கல் மலைகிராமத்திற்கு சாலை அமைப்பது சார்பாக நடந்தே சென்று ஆட்சியர் கிராமத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது மலைவால் இளைஞர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்ததையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.