Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குருமாவில் கிடந்த பல்லி…. பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி,மயக்கம்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…!!

பல்லி விழுந்த பரோட்டாவை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான செந்தில்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா, உறவினர்களான சண்முகம், சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் வாடகைக்கு கார் எடுத்து அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அனைவரும் காந்திஜி ரோட்டில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சாப்பிட முடிவு செய்தனர். அப்போது செந்தில்குமார் மட்டும் ஹோட்டலுக்கு சொல்லாமல் காரி உட்கார்ந்திருந்தார். இதனையடுத்து அமுதா, சந்திரன், சண்முகம், சுரேஷ் ஆகியோர் ஹோட்டலுக்குள் சென்று பரோட்டா சாப்பிட்டுள்ளனர். அப்போது குருமாவில் இறந்து போன பல்லி கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து 4 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் ஹோட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடைபெற்ற உடன் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விக்னேஷ் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |