குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேளம் வாசிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
குருவாயூர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் தற்போது தலித் இளைஞர் ஒருவர் மேளம் வாசிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குருவாயூர் கோயில் உள்ளிட்ட கேரளாவில் பெரும்பாலான கோவில்களில் சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே வழிவழியாக இந்த பணிக்கு நியமனம் செய்யப்பட்டு வருவார்கள்.
இந்நிலையில் கருவன்னூர் மேலப்பெருக்கல் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சதீஷ் தெரிவித்துள்ளதாவது: “குருவாயூர் கோவில் மேள கலைஞர் பணியை தொடங்கியுள்ளேன். இந்த பணி இறைவனின் கருணையால் எனக்கு கிடைத்தது. பணியில் சேர்ந்த பின்பு கோவிலில் பணியாற்றும் சக கலைஞர்களும் மற்றும் ஊழியர்களும் எனக்கு நல்ல ஒத்துழைப்பை தருகின்றனர்” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.