Categories
Uncategorized மாநில செய்திகள்

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை…. கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு கவலை அடைந்ததாக என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ஆம் தேதி  நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இதையடுத்து வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் 80% தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்..

இந்நிலையில் வருண் சிங் சிகிச்சை பலனளிக்காமல் காலமானதாக இந்திய விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இரங்கலை தெரிவித்துள்ளது.. இதனால் குன்னூர் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13ல் இருந்து  14 ஆக அதிகரித்துள்ளது.. 13 பேர் மரணமடைந்த நிலையில், தற்போது வருண் சிங்கும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டுகவலை அடைந்தேன் . அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும். மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார்.” என்று பதிவிட்டுள்ளார்..

Categories

Tech |