புதுச்சேரியில் 32 ஆயிரம் அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 22,000 ஊழியர்கள் மட்டுமே தற்போது பணியில் இருக்கின்றன. பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே காலியாக உள்ள பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலி பணியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மட்டும் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் பணிநீய மனம் எதுவும் நடைபெறவில்லை.
ஒருவேளை அப்படி வேலை தொடர்பான அறிவிப்பு வெளியானாலும் பல ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து எடுத்து தேர்வையும் உடற் பகுதி தேர்வையும் நடத்தும் நிலை உள்ளது. இது போட்ட சூழ்நிலையில் தற்போது தற்போது பத்தாயிரம் பணியிடங்களில் நிரப்ப புதுச்சேரி அரசு முனைப்பு காட்டி வருகின்றது. அதனால் குரூப் சி பணியிடங்களுக்கு மட்டும் வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த வயது தளர்வு ஒவ்வொரு பதவியிலும் முதல் நேரடி நியமனம் அல்லது 2023 முதல் 2024 நிதியாண்டு மார்ச் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு துறைகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.