Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குரூப்-1 தேர்வர்கள் கவனத்திற்கு” அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் இலவச வகுப்புகள்…. வெளியான அறிவிப்பு ….!!!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பரண்டு , உதவி ஆணையர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், உதவி இயக்குனர்  உள்ளிட்ட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று தான் கடைசி நாள்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்விற்கு நமது மாவட்டதில் அமைந்துள்ள  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த மாதம் 2-ஆம்  தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது . இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று  கொடுத்து வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |