தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் குரூப்-1 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி முதல் நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வானது நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி என்று தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இந்த தினத்தில் அரசியல் கட்சிகள் தென் மாவட்டங்களை சேர்ந்த பலரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் காரணமாகத்தான் குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.