Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வு நடைமுறை ஒத்திவைக்கும் அபாயம்… தமிழ் மொழி தான் காரணம்… ஐகோர்ட் மதுரை கிளை விளக்கம்…!!!

தமிழகத்தில் தமிழ் மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தமிழ் வழியில் பயின்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதும் அனைவருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. அதனை பலர் முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதனை விசாரணை செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகிறார்கள்.

தமிழ்மொழி படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படுகின்ற சலுகைகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வழியில் படித்தவர்கள் பள்ளியிலிருந்தே தமிழ்வழி பயின்றவர்களா? என்று கேள்வி எழுப்பினர். பட்டப் படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும். தமிழ் வழி இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வகையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்க கூடாது? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |