Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வு மதிப்பெண் வெளியீடு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப்-1 தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எழுந்த சர்ச்சையால் மதிப்பெண் விவரங்களை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அரசு துறைகளில் துணை கலெக்டர் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 66 பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்ற 3800 பேரை விவரங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதானத் தேர்வு நடந்து முடிந்தது.

அதன் முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டன.அதில் 1307 பேர் நேர்காணலுக்கு தேர்வாகி ஜூலை 15ஆம் தேதி நேர்காணல் நடத்தி அதே நாளில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் டி என் பி எஸ் சி அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அவ்வாறு பணிநீயமான பெற்றவர்களில் 87 சதவீத பேர் பெண்கள்.

இதனால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இரட்டிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆண் தேவர்கள் புறக்கணிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் குரூப் ஒன் முதல் நிலை தேர்வு பிரதான தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்ற அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதனை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளதாக tnpsc தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |