Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வெழுதியவர்களுக்கு…. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் குரூப்-1 விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி குரூப்-1 முதல்நிலை, முதன்மை தேர்வில் பங்கேற்றவர்கள் விடைத்தாள்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் ஒரு முறை பதிவு முறையின்படி உரிய கட்டணத்தை செலுத்தி விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |