தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் தர ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களை 20% ஒதுக்கீட்டில் தேர்வு செய்து புதிய பட்டியலை வெளியிட கோரிய வழக்கில், 12 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Categories