Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் எதிரொலி – பெண் ஊழியர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலரும் தரவரிசையில் முன்னிலை பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்ச்சி பெற்ற விதம் மற்றும் மோசடி நபர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சுபையா நகரைச் சேர்ந்த மாலா தேவி என்பவர் இத்தேர்வில் மாநில அளவில் தரவரிசையில் 37 ஆவது இடம் பெற்ற ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக பெண் ஊழியர் மாலாதேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Categories

Tech |