போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழக அரசு துறைகளில் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கியமாக பங்கு வைக்கிறது. ஆண்டிற்கு கிட்டத்தட்ட 35 க்கும் அதிகமான போட்டித் தேர்வுகளை நடத்தி கிட்டத்தட்ட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை அரசு துறைகளில் நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பெரிய அளவில் போட்டித் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை.
இதனால் தேர்வை நடத்துவதில் தேக்க நிலை ஏற்பட்டு வந்தது. இந்த வருடத்தை பொருத்தவரை குரூப்-1 தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது. குரூப் 2 , குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளை பட்டதாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கொரோனா குறைந்து விட்ட இந்த சூழ்நிலையில் தேர்வுகளை விரைவுபடுத்துவது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக நாளை காலை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்கள் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எந்தெந்த போட்டித்தேர்வுகள் எப்போது நடத்துவது? எத்தனை காலி பணியிடங்கள் இருக்கின்றன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நாளை ஆலோசனை செய்யப்பட உள்ளது.