Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்கேள… இன்னும் இரண்டே நாள் தான் இருக்கு… உடனே கிளம்புங்க…!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை மறுநாள் முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே இருபத்தி ஒன்றாம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  20 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ட படிப்பு முடித்த அனைவரும்  குரூப்-2,2A தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |